57 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வால்பாறையில் 57 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-09-01 21:45 GMT


வால்பாறை

வால்பாறை நகராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்தநிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பெர்ப்பெற்றி டெரன்ஸ் லியோன் உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளர் வீரபாகு தலைமையில் தூய்மை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் அனைத்து கடைகளிலும் திடீரென பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை மேற்கொண்டனர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து பேக்கரி, ஓட்டல், நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் என ஒரே நாளில் 57 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.அடுத்தமுறை சோதனையின் போது, பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்