உடன்குடியில் ரூ.52 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணி
உடன்குடியில் ரூ.52 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.;
உடன்குடி:
தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனையின் பேரில், உடன்குடி பேரூராட்சி 1-வது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் ரூ.25.60 லட்சம் மதிப்பிலும், 10-வது வார்டு கிறிஸ்டியாநகரம் தெற்கு தெருவில் ரூ.27 லட்சம் மதிப்பிலும் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி தொடக்க விழா நடந்தது.
உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடன்குடி பேரூராட்சி நிர்வாக அதிகாரி பிரபா, இளநிலை பொறியாளர் விஜயகுமார், உடன்குடி 10-வது வார்டு கவுன்சிலரும், நிலைக்குழு உறுப்பினருமான ஜான்பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.