'மக்கள் நல்வாழ்வுத்துறையில் 5,100 காலிப்பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்' - அமைச்சர் மா.சுப்பிரமனியன்
இரண்டரை ஆண்டுகளில் 30,987 காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமனியன் தெரிவித்தார்.;
சென்னை,
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் பொது சுகாதாரத் துறையில் 332 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்புனர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 30 ஆயிரத்து 987 காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அடுத்த ஒரு மாதத்திற்குள் 5 ஆயிரத்து 100 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.