பழனியில் 500 மீட்டர் நீள தேசியக்கொடியுடன் ஊர்வலம்

பழனியில் பா.ஜ.க. சார்பில் 500 மீட்டர் நீள தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2022-08-12 17:16 GMT

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்து, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பழனி தேரடியில் உள்ள நேதாஜி சிலை பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.

இந்த ஊர்வலத்தின்போது, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 500 மீட்டர் நீள பிரமாண்ட தேசியக்கொடியை ஏந்தி பா.ஜ.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், அடிவாரத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ஆனந்த் மற்றும் பா.ஜ.க.வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்