காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

முக்காணியில் காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-16 18:45 GMT

ஆத்தூர் அருகே முக்காணியில் காரில் கடத்தி ெசல்லப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் வாகன ேசாதனை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைச்சாமி தலைமையில், சிறப்பு சப்-இன்ஸபெக்டர்கள் முத்துராஜன், செந்தட்டிஐயன் மற்றும் போலீசார் முக்காணி ரவுண்டானாவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதில் 50 கிலோ எடை கொண்ட 10 மூட்டைகளில் மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

2 பேர் சிக்கினர்

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து கார் டிரைவர் நல்லூர் மறவர்காலனியை சேர்ந்த பரிசமுத்து மகன் பூல்பாண்டி (வயது 23), பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் சண்முகசுந்தரம் (43) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் 500 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்