காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்;

Update: 2022-06-30 22:18 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் நேற்று மயிலாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், காரில் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், கார் டிரைவரான குழித்துறை அருகே மடிச்சல் மணியாத்தட்டுவிளையை சேர்ந்த ஸ்டாலின் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்