காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த 50 சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சிப் பொறி-வேளாண் அதிகாரி தகவல்
காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த 50 சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சிப் பொறி-வேளாண் அதிகாரி தகவல்
ஆனைமலை
ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டர் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் அதிக சேதத்தை விளைவிக்கக்கூடியது காண்டாமிருக வண்டு. இதன் தாக்குதல் தென்னை மட்டுமின்றி பாக்கு மரத்திலும் காணப்படுகிறது. இந்த நிலையில் வேளாண் துறை சார்பில், தென்னை விவசாயிகளுக்கு காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தி ஒழிக்க மானிய விலையில் இனக்கவர்ச்சிப் பொறிகள் வழங்கப்படுகிறது. 'ரைனோலுார்' என்ற இனக்கவர்ச்சிப் பொறி, ஒரு மூடப்பட்ட பிளாஸ்டிக் பக்கெட் போன்ற உபகரணம் மற்றும் இரு பாக்கெட்டுகள் மருந்தும் இணைந்தது. ஏக்கருக்கு, 1 இனக்கவர்ச்சிப் பொறி வைக்கலாம். இதனுள் மருந்து பொருத்தி விட்டு சோற்று கஞ்சி அல்லது மண்எண்ணெயை அதில் ஊற்றி வைக்க வேண்டும். இனக்கவர்ச்சி பொறியில் உள்ள துளைவழியாக காண்டமிருகவண்டு வரும் அதில் உள்ள மருந்தால் மயக்கம் ஏற்பட்டு கஞ்சியில் சிக்கி இறந்து விடும். இனக்கவர்ச்சி பொறியை 50 சதவீத மானியத்தில் ரூ.958-க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தேவைபடும் விவசாயிகள் ஆனைமலை, கோட்டூர் வேளான்மை அலுவலகத்தில் உரிய ஆவணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். இந்த தகவலை வேளாண் அதிகாரி விவேகானந்தன் தெரிவித்தார்.