சாலையில் சுற்றி திரிந்த 50 நாய்கள் பிடிபட்டன

நெல்லை மேலப்பாளையத்தில் சாலையில் சுற்றி திரிந்த 50 நாய்கள் பிடிபட்டன.;

Update: 2022-08-27 19:42 GMT

நெல்லை மாநகர பகுதியில் ஏராளமான இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைவதாக புகார்கள் வந்தது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின்பேரில் மாநகரப் பகுதி முழுவதும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் செல்வ விநாயகர் கோவில் தெரு, கன்னி விநாயகர் கோவில் தெரு, நேருஜி சாலை பகுதிகளில் நாய்கள் பிடிக்கப்பட்டன. நாய் பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலப்பாளையம் சுகாதார ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மேலப்பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர்.

பிடிப்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. நாய்கள் பிடிக்கும் பணி மாநகர பகுதியில் தொடந்து நடைபெறும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்