முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2024-06-27 16:21 GMT

கரூர்,

கரூரில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கூறி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்