மூதாட்டியிடம் 5½ பவுன் நகை அபேஸ்:கில்லாடி பெண் சிக்கினார்
பேய்க்குளத்தில் மூதாட்டியிடம் 5½ பவுன் நகை அபேஸ் செய்த கில்லாடி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;
தட்டார்மடம்:
பேய்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ஆண்டி மனைவி செண்டம்மாள் (வயது67) இவர் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு நெல்லை மாவட்டம் தாழையூத்து செல்வராஜ் மனைவி பாப்பாத்தி(57) சென்றுள்ளார். முதியோர் உதவித்தொகையை விரைவில் பெற்று தருவதாக கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவரிடம் பேச்சு கொடுத்தவாறு பீரோவில் இருந்த 5½பவுன் சங்கிலியை திருடி கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் பாப்பாத்தியை கைது செய்து, நகையை மீட்டனர்.