வாசலில் கோலம் போட்டபோது பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பு

சோழவரம் அருகே வாசலில் கோலம் போட்டபோது பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-06-25 07:26 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆங்காடு பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் சாந்தா (வயது 60). இவர் நேற்றுக்காலை வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாந்தாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரை தாக்கி விட்டு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று தலைமறைவாயினர். இது தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மோட்டார் சைக்கிளில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்