ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் சிக்கினர்
ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் சிக்கினர்;
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஜெய்ஹிந்த்புரம் ராமையாதெரு 13-வது தெரு பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்த போது 5 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்த போது, ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த உமையாகுமார் (வயது 23), பாரதியார் ரோடு அருண்பாண்டி (23), ராமமூர்த்தி நகர் 4-வது தெரு பிரகாஷ்ராஜ் (21), அஜிஸ் (21), ஜீவானந்தம் (22) என்பதும், அவர்கள் 3 கத்தி, மிளகாய்பொடி பாக்கெட், கயிறு ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற மாரிசெல்வத்தை தேடி வருகின்றனர்.