கரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கரூர் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடவூர் நல்லூராம் பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 40), இடையப்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (42), காரைக்குடியை சேர்ந்த மணிகண்டன் (26), மன்னார்குடியை சேர்ந்த வீரமணி (42), பசுபதிபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (48) ஆகியோர் அந்தந்த பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மொத்தம் 43 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.