மது விற்ற 5 பேர் கைது

பாவூர்சத்திரம் பகுதியில் மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-02-05 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மது விற்பனை செய்ததாக மேலப்பாவூர் வேம்படி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அழகையா (வயது 61), மேலஅரியப்பபுரம் குமாரசாமிபுரத்தை சேர்ந்த குத்தாலிங்கம் (54), மலையராமபுரம் அன்புநகரை சேர்ந்த வைத்திலிங்கம் (36), மேலப்பாவூர் பால்பண்ணை தெருவைச் சேர்ந்த முத்துசாமி (63), கரிசலூர் கீழத்தெருவை சேர்ந்த தங்கசாமி (42) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 191 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்