ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த கல்லாலங்குடி நாடியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபால் மகன் வெங்கடேஷ் (வயது 29), ஆண்டிகுளம் ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (28), சூரன்விடுதி சிக்கப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (43) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் விராலிமலையில் மதுவிற்றதாக விராலிமலை போலீசார் மணப்பாறை தாலுகா கெ.பெரியபட்டியை சேர்ந்த ஜெயராமன் (47), காமராஜர் நகரை சேர்ந்த சண்முகம் (64) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.