சீட்டுக்கட்டு விளையாடிய 5 பேர் கைது

சீட்டுக்கட்டு விளையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-03-31 19:08 GMT

பெருங்களூர் அருகே உள்ள வெள்ளவெட்டான்விடுதி கிராமத்தில் உள்ள தைல மரக்காட்டில் சிலர் சீட்டுக்கட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆதனக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் சீட்டுக்கட்டு விளையாடியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வெள்ளவெட்டான்விடுதியை சேர்ந்த ராஜா (வயது 42), மனவாத்திப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (60), மட்டையன்பட்டியை சேர்ந்த கார்த்திக் (40), ஞானமுருகன் (40), போரம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விளையாட்டுக்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்