சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
ஆனைமலை அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஆனைமலை
ஆனைமலை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் ஆனைமலை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி, சுப்பிரகாவுண்டன்புதூர், ஜமீன் ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த கவுதம் (வயது 19), மணிகண்டன் (24), அக்பர் அலி (28), மதன்குமார் (23), ஈஸ்வரன் (42) ஆகிய 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.