லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதுப்பேட்டை, ராசு வீதி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 25), தளவாய்பள்ளி ஆனந்தராஜ் (25), விமல்ராஜ் (24), ஜிஞ்சுப்பள்ளி ஜெயபால் (32), மேல்கரடிகுறி சுரேஷ் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2,800 பறிமுதல் செய்யப்பட்டது.