அறந்தாங்கி, நாகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த திருச்சியை சேர்ந்த நரசிங்க பிரதீஸ்வரன் (வயது 23), பிரசாந்த் (22), நாகுடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த செல்லத்துரை (25), கார்த்திக் (34), குணா (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.