கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-08-27 21:52 GMT

திருச்சி விமான நிலையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு கஞ்சா விற்ற ராகுலை (வயது 21) கைது செய்தனர். இதேபோல் ஸ்ரீரங்கம் குஜிலியம் தோப்பு பகுதியில் கஞ்சா விற்ற மதன்குமார் (22), ராமச்சந்திரன் (19) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து காந்திமார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்ற வரகனேரியை சேர்ந்த கண்ணன் (32), பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்ற கூனிபஜாரை சேர்ந்த குருமூர்த்தி (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்