போலி மதுக்கடை நடத்திய 5 பேர் கைது
காரைக்குடி அருகே போலி மதுக்கடை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
காரைக்குடி,
காரைக்குடி அருகே போலி மதுக்கடை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலி மதுக்கடை
காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் போலி மதுபானக்கடை நடத்தப்படுவதாக காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
அங்கு கல்லல் தெற்கு பகுதி 3-வது தெருவில் ஏற்கனவே அரசு சார்பில் இருந்த மதுக்கடையின் பின்புறம் தனியார் பார் அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்து கடை போல் நடத்தி வந்தது. தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த போலி மதுக்கடையில் இருந்த 5 ஆயிரம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
5 பேர் கைது
மேலும் கடையின் விற்பனையாளர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த வீரபத்ரன் (வயது 23), கல்லல் ஆலம்பட்டு பகுதியைச் சேர்ந்த கருப்பையா (61), கல்லல் பாலமுருகன் (47), திண்டுக்கல் டான்போஸ்கோ (42), மேலூர் மாணிக்கவாசகம் (38) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.