தஞ்சை மேம்பாலம் அருகே சூதாட்டம் நடப்பதாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சூதாடிய தஞ்சை மானம்புச்சாவடி பகுதியை சேர்ந்த ரபீக், கரந்தையை சேர்ந்த அன்சாரி, சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், மேம்பாலம் பகுதியை சேர்ந்த அறிவழகன், பொன்னியின் செல்வன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.