வேலூரில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

வேலூரில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2023-10-22 16:38 GMT

வேலூர்,

தமிழகத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து பொதுமக்கள் பயணம் செய்து வரும் நிலையில், சில தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் மோட்டார் வாகன போக்குவரத்துத் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் சாலை வரி செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்