கழிவறை கட்ட ரூ.5 லட்சம்

செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில்கழிவறை கட்ட ரூ.5 லட்சம் அமைச்சர் மஸ்தானிடம் வழங்கப்பட்டது.;

Update: 2022-11-03 18:45 GMT

செஞ்சி:

செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் கழிவறை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பங்குத்தொகையாக செஞ்சி ரோட்டரி சங்கம் ரூ.4 லட்சமும், வார்டு கவுன்சிலர் சுமித்ரா சங்கர் ரூ.1 லட்சமும் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார். செஞ்சி ரோட்டரி சங்க தலைவர் பாஸ்கர், செயலாளர் ஜெரால்டு, பொருளாளர் ராஜகோபால், கவுன்சிலர் சுமித்ரா சங்கர் ஆகியோர் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினர். இதனுடன் அரசு தொகையாக ரூ.10 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை கட்டப்பட உள்ளது. நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், துணை தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, கவுன்சிலர்கள் ஜான் பாஷா, சிவக்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், இளங்கோவன், குறிஞ்சிவளவன், கருணைவேல், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்