2 நாட்களில் மெட்ரோ ரெயிலில் 5 லட்சம் பயணிகள் பயணம்

மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது முதல் இதுவரையில் இதுவே அதிகபட்சமாக பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது;

Update: 2022-10-25 07:56 GMT

சென்னை:,

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. தீபாவளி கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு 20, 21 மற்றும் 22-ந்தேதிகளில் 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. கூடுதலாக இயக்கப்பட்ட சேவைகள் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயணித்துள்ளனர்.

இதுவரையில் இல்லாத அளவிற்கு பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அதிகபட்சமாக 2 லட்சத்து 63 ஆயிரத்து 610 பேர் பயணம் செய்தனர். 20-ந்தேதி 2 லட்சத்து 48 ஆயிரத்து 556 பேர் பயணம் செய்தனர். 2 நாட்களும் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 12 ஆயிரத்து 166 பேர் பயணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது முதல் இதுவரையில் இதுவே அதிகபட்சமாக பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்