மதுரை ஐகோர்ட்டில் லோக் அதாலத் மூலம் ரூ.5 கோடி இழப்பீடு

மதுரை ஐகோர்ட்டில் லோக் அதாலத் மூலம் ரூ.5 கோடி இழப்பீடு;

Update: 2022-11-12 20:33 GMT


மதுரை ஐகோர்ட்டில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள் புகழேந்தி, ஸ்ரீமதி, விஜயகுமார் ஆகியோர் தலைமையிலான 3 அமர்வுகள் பல்வேறு வழக்குகளை விசாரித்தன. இந்த அமர்வுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மோகன்தாஸ், சிவசுப்பிரமணியன், பூபாலன் ஆகியோரும், வக்கீல்கள் ஆர்.வெங்கடேசன், ஜெயா இந்திராபடேல், சுரேஷ் ஐசக்பால் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். விபத்து வழக்குகள், வங்கி, இன்சூரன்ஸ் வழக்குகள், தனிநபர் வழக்குகள் என மொத்தம் 376 வழக்குகளை சுமூக தீர்வு காண்பதற்காக பட்டியல் இடப்பட்டன. முடிவில், மொத்தம் 42 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.5 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்