வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது

ஆனைமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-06-12 16:15 GMT

ஆனைமலை

ஆனைமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாட்டு துப்பாக்கி

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த சேத்துமடை அருகே பணப்பள்ளம் பகுதியில்  2 முறை வெடி சத்தம் கேட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

அப்போது காண்டூர் கால்வாய் வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கோவையை சேர்ந்த மோகன்ராம், பாலசுப்பிரமணியன், ராஜ்குமார், சதீஷ் மற்றும் ஆழியாறு பகுதிைய சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் இருந்தனர். மேலும் நாட்டு துப்பாக்கி, 5 தோட்டாக்கள், கத்திகள் இருந்தன.

கைது

உடனே அவற்றை காருடன் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், காட்டுப்பன்றியை வேட்டையாட துப்பாக்கி சூடு நடத்தியதும் தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்