திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 47 பேர் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2022-06-29 20:17 GMT

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 13 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 198 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், முககவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கையை சுத்தப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்