47 கிலோ மீன்கள் பறிமுதல்
பதப்படுத்தப்பட்ட 47 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது;
நெல்லை உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம், இன்ஸ்பெக்டர் தேன்மொழி அடங்கிய குழுவினர் பாளையங்கோட்டை சமாதானபுரம், சீவலப்பேரி ரோடு, சாந்திநகர், மகாராஜநகர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் மீன்கடைகளில் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது, மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்படி பதப்படுத்தப்பட்ட 47 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து கிருமி நாசினி தெளித்து அழிக்கப்பட்டது.