காரில் கடத்திய 450 கிலோ புகையிலை பறிமுதல்

காரில் கடத்திய 450 கிலோ புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2023-10-19 22:16 GMT

நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று பெருவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நெல்லை பதிவெண் கொண்ட கார் ஒன்று வந்தது. உடனே போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், சிறு சிறு மூடைகளில் 450 கிலோ புகையிலை (வெற்றிலைக்கு பயன்படுத்தப்படும் புகையிலை) இருந்தது. இதனை தொடர்ந்து புகையிலை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் ஜி.எஸ்.டி. ரசீது ஆகியவற்றை போலீசார் கேட்டனர். ஆனால் கார் டிரைவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதனை தொடர்ந்து காருடன் புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக புகையிலையை காரில் கடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரான நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த வர்கீஸ் ராஜாவை (வயது 34) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்