ரூ.4.4 கோடியில் வளர்ச்சி திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

பொய்கை பஞ்சாயத்தில் ரூ.4.4 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.;

Update: 2023-08-26 20:39 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே பொய்கை பஞ்சாயத்தில் ரூ.4.4 கோடியில் கள்ளம்புளி சமுதாய நலக்கூடம் முன்பு கோவில் வரை பேவர் பிளாக் அமைத்தல், ஊருணியில் தூர்வாரி தடுப் புச்சுவர் அமைத்தல், கள்ளம்புளி முதல் கரடிகுளம் வரை தார்சாலை, 3 பாலங்கள் அமைத்தல், புதிய குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ் தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் சுப்பம்மாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஜெயக்குமார் வரவேற்றார்.

தி.மு.க. முன்னான் மாவட்ட செயலாளர் செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், திட்டக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்