435 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்
திருவிடைமருதூர் அருகே 435 புதுச்சேரி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான 2 பேரை கைது செய்தனர்.;
திருவிடைமருதூர்:
திருவிடைமருதூர் அருகே 435 புதுச்சேரி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான 2 பேரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக புதுச்சேரி சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மற்றும் போலீஸ் ஏட்டு சரவணக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
2 பேர் கைது
அப்போது மணஞ்சேரி பகுதியில் ஒரு இடத்தில் 435 புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மணஞ்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல், புதுத்தெருவைச் சேர்ந்த ராஜ்மோகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர்கள் 2 பேரும் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.