400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

400 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-10-12 18:45 GMT

களியக்காவிளை:

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜகுமார் ஆகியோர் குழித்துறை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ஆட்டோவை தங்களது வாகனத்தில் துரத்தி சென்றனர். 1 கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று திருத்துவபுரம் பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தினர். உடனே டிைரவர் இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை ஆட்டோவுடன் பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புக்காடு குடோனிலும், வாகனத்தை வட்ட வழங்கல் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்