சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 40 சதவீதம் நிறைவு - மேயர் பிரியா
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா, சென்னையில் 1,300 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்றும் தெரிவித்துள்ளார். சரியாக பணியாற்றாத மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.