கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது;

Update: 2022-12-30 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணிஸ்வரி தலைமையில் தனிப்படை போலீசார் வரஞ்சரம் மணிமுக்தா பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் 700 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர்கள் குருர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரங்கநாதன்(வயது 19), ஏழுமலை மகன் விக்னேஷ்(19), அயோத்தி மகன் சந்துரு(19) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல் குருர் ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த முடியனூர் கிராமத்தை கருப்பையன் மகன் கார்த்திக்(23) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் விற்பனைக்காக பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்