மனைவியை கத்தியால் குத்தியவருக்கு 4 ஆண்டு சிறை

மனைவியை கத்தியால் குத்தியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது;

Update: 2022-09-27 21:35 GMT

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பெருமாத்தாள் (வயது 40). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த வீரபுத்திரன் என்ற ராஜ் (38) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். பெருமாத்தாள் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட வீரபுத்திரன் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்தார். இதனால் 3 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி பெருமாத்தாளை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வீரபத்திரன் தகராறு செய்தார். அப்போது ஆத்திரமடைந்த வீரபுத்திரன் கத்தியால் மனைவியை குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபுத்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகிளா கோட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி விஜயகுமார் வழக்கை விசாரித்து வீரபுத்திரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்