தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
பெரியகுளம் அருகே தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது;
பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ரிசாத் ராஜ் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி கெங்குவார்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த காவலாளி மொக்கை (60) மற்றும் செவிலியர்களை மதுபோதையில் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பெரியகுளம் சப்-கோர்ட்டில் ரிசாத் ராஜ் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன் குற்றம் சாட்டப்பட்ட ரிசாத் ராஜுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ரிசாத் ராஜ் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு அடைக்கப்பட்டார்.