இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை
இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர்.
ராமேஸ்வரம்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் வாழ முடியாமல் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். அது போல் இதுவரையிலும் தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து 120-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். அங்கிருந்து மண்டபம் கடலோரகாவல் நிலையம் வந்துள்ளனர். அவர்களிடம் கடலோர போலீசார் மற்றும் மத்திய மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்