கஞ்சா வைத்திருந்த 4 பேர் சிக்கினர்
நெல்லையில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் சிக்கினர்.;
நெல்லை மாநகர மதுஒழிப்பு மற்றும் அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பிரவீனா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை டவுன் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் டவுன் தையல்காரர்தெருவை சேர்ந்த தேவேந்திரபாலன் மகன் பாஞ்சாலிரஜி (வயது 21), தண்டியல்சாவடி தெருவை சேர்ந்த மோகன் மகன் மதன் (19), சாலியர் தெருவை சேர்ந்த வீரபாகு மகன் சாய் பிரகாஷ் (21), பழையபேட்டையை சேர்ந்த முகமதுஆதாம்சமீர் (23) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.