கத்தியை காட்டி செல்போன், பணம் பறித்த 4 பேர் கைது

கத்தியை காட்டி செல்போன், பணம் பறித்த 4 பேர் கைது

Update: 2022-10-30 20:22 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 47). இவர் பெரம்பலூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பணிக்கு செல்வதற்காக கப்பலூர் பஸ் நிறுத்தத்திற்கு இரவு 11 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதுபோல் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த விஜயகுமார் (35) என்பவர் மினி வேனில் ஆவின் பால் இறக்குவதற்கு வந்துள்ளார். அப்போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை மிரட்டி செல்போனை பறித்து சென்றது. இச்சம்பவம் குறித்து பொன்ராஜ் மற்றும் விஜயகுமார் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழிப்பறி செய்த மர்ம கும்பலை திருமங்கலம் நகர் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஆரப்பாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாதவன், கரிமேடு கார்த்திக், புட்டு தோப்பு பார்த்தசாரதி, கிருஷ்ணாபுரம் சல்மான் ஆகிய 4 பேரை கைது செய்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்