திருமருகல் அருகே சாராயம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து, மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
திருமருகல் அருகே சேஷமூலை பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குடவாசல் பருத்தியூர் ரோட்டு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் கலைச்செல்வன் (வயது23), குடவாசல் சாலியமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ரஞ்சித் ( 21) ஆகியோர் என்பதும், இவர்கள் காரைக்காலில் இருந்து குடவாசலுக்கு சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
மோட்டார்சைக்கிள் பறிமுதல்
அதேபோல் உத்தூர் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிக்கல் பனைமேடு காலனி தெருவை சேர்ந்த செந்தில் மகன் அஜித் (24), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் தனுஷ் (21) ஆகியோர் என்பதும், இவர்கள் சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இ்தையடுத்து திட்டச்சேரி போலீசார் 2 பேரையும் கைது செய்து அவரிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.