மது, புகையிலை விற்ற 4 பேர் கைது

கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில் மது, புகையிலை விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-10-02 20:30 GMT

நெகமம் பகுதியில் நெகமம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வடசித்தூர் கிணத்துக்கடவு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் ஒருவர் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெகமம் போலீசார் அங்கு விரைந்து சென்று, மது விற்பனை செய்த வடசித்தூரை சேர்ந்த கார்த்திகேயன்(வயது 31) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோட்டில் மது விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியை சேர்ந்த ராஜா(29), வடபுதூர் கல்லுக்குழி பகுதியில் மது விற்பனை செய்த திருவாடானை பகுதியை சேர்ந்த வரதராஜ்(42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கொண்டம்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரி மும்மூர்த்தியை(68) போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்