சாராயம் விற்ற தாய்-மகன் உள்பட 4 பேர் கைது

சாராயம் விற்ற தாய்-மகன் உள்பட 4 பேர் கைது

Update: 2023-02-12 18:45 GMT

கீழ்வேளூர் அருகே வலிவலத்தில் சாராயம் விற்ற தாய்-மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி-சோதனை

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கீழ்வேளூர் போலீஸ் சரகம் வலிவலம் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் வலிவலம் போலீசார் வலிவலம் பெருமாள் கோவில் தெருவில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

4 பேர் கைது

அப்போது அந்த வீட்டில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரவி (வயது 55), ஆதமங்கலம் ஜீவா நகரை சேர்ந்த பழனிவேல் (49), வலிவலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் மணிகண்டன் (23), அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி சாந்தி (50) ஆகிய 4 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்