கஞ்சா விற்றதாக அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது

கஞ்சா விற்றதாக அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.;

Update:2023-10-15 23:51 IST

திருப்பத்தூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்றதாக திருப்பத்தூரை சேர்ந்த சவுகத் அலி மகன் முகமது ஜக்கிரியா என்ற லியாகத் (வயது 24) மற்றும் 18 வயது வாலிபர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் குரும்பேரி பகுதியில் கஞ்சா விற்றதாக அண்ணன், தம்பிகளான அதே பகுதியை சேர்ந்த அஜித் (25), ஆறுமுகம் (30) ஆகியோரை திருப்பத்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்