கார் மோதி டாக்டர் உள்பட 4 பேர் காயம்

பாளையங்கோட்டையில் கார் மோதி டாக்டர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-09-04 19:42 GMT

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் சந்திரன் (வயது 49). இவர் நெல்லையில் உள்ள மத்திய கலால் துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர் பாளையங்கோட்டை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் நின்று கொண்டிருந்த தூய்மை பணியாளர்கள் வாகனம் மீது மோதி, பணியாளர்கள் மீதும் மோதிவிட்டு, அங்கிருந்த மின்கம்பம் மீது மோதி நின்றது.

இதில் அந்த வழியாக நடந்து சென்ற பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த பூமிநாதன் (வயது 64), மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கலாமணி (49), விஜயா (38) மற்றும் ஒரு சித்தா டாக்டர் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்