கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது

கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-22 21:16 GMT

முசிறி:

முசிறியை அடுத்த ஆமூர் பழையபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ்(வயது 43). கொத்தனார். சம்பவத்தன்று இவர் முசிறி பூங்கா ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது எம்.புதுப்பட்டி சொரியம்பட்டியை சேர்ந்த தியாகராஜன்(38), அவரது தம்பி பாலு(25), அதே பகுதியை சேர்ந்த நெடுமாறனின் மகன் கோவிந்தராஜ்(22), சண்முகம் மகன் ராஜேஷ்(19) ஆகிய 4 பேரும் சேர்ந்து, தியாகராஜனின் மனைவி வாசுகி சித்தாள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாதது தொடர்பாக விஜயராஜிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் செங்கலால் விஜயராஜை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இது குறித்து விஜயராஜ் கொடுத்த புகாரின்பேரில் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்