தாய்ப்பால் குடித்த 4 மாத குழந்தை திடீர் சாவு- போலீசார் விசாரணை

தாய்ப்பால் குடித்த 4 மாத குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-09-21 02:26 IST

சோழவந்தான்

சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்பிரபாகரன் (வயது 30). இவரது மனைவி தீதினா (23). இவர்களுக்கு 4 மாதத்தில் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த குழந்தை இறந்து விட்டது. இது குறித்து தீதினா காடுபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜு தலைமையிலான போலீசார் குழந்தையை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து சமூக நலத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்