பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி சகுந்தலாதேவி (வயது 27). இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர் ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.