சிறைக்கைதிகளுக்கு ரூ.4 லட்சம் புத்தகங்கள்

சிறைக்கைதிகளுக்கு ரூ.4 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டது.;

Update: 2023-03-10 20:39 GMT

சிவகாசி, 

சிறையில் உள்ள கைதிகளுக்காக பல இடங்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் நூலகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறையில் உள்ள நூலகங்களில் போதிய புத்தகங்கள் இல்லாத நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து புத்தகங்களை சேகரித்து தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் அனுப்பி வருகிறார்கள். இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சக உரிமையாளர்கள் சிலர் சிறையில் உள்ள கைதிகளுக்கு தேவையான புத்தகங்களை மொத்தமாக வாங்கி விருதுநகர் கிளை சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், தொழிலதிபர்கள் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புத்தங்களை சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இதனை சிறை கண்காணிப்பாளர் ரமாபிரபா, உதவி ஆய்வாளர்கள் இலங்கேஸ்வரன், சோனை, பாலமுருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போது நாடார் மகா ஜனசங்க சிவகாசி மாநகர செயலாளர் அறிவு ஒளிஆண்டவர் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்