ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் ரூ.4¼ லட்சம் அபேஸ்

பர்கூர் ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் சிறிய முதலீட்டில் அதிக வருமானம் கிடைப்பதாக கூறி ரூ.4 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-07-08 17:36 GMT

பர்கூர் ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் சிறிய முதலீட்டில் அதிக வருமானம் கிடைப்பதாக கூறி ரூ.4 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜவுளிக்கடை உரிமையாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி ரோடு பகுதியில் வசிப்பவர் ஹேமபிரியா (வயது 28). பர்கூரில் ஜவுளி கடை வைத்துள்ளார். இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல்வந்துள்ளது.

அதில் குறைந்த அளவில் பண முதலீடு செய்தால் அதிக லாபத்துடன் வருமானம் கிடைக்கும். ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பணம் அபேஸ்

‌மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ளுமாறு ஒரு இணையதள லிங்கையும் அனுப்பி உள்ளனர். அதை நம்பி ஹேமபிரியாவும் சிறிதளவு பணத்தை அதில் முதலீடு செய்தார். அதற்கு லாபத்துடன் பணம் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் தொடர்ந்து அதில் முதலீடு செய்துள்ளார். மொத்தமாக, 4 லட்சத்து 37 ஆயிரத்து 879 ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று அந்த இணையதள பக்கம் முடங்கியது.

ஹேமபிரியாவால் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்கவும் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்